26.5 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

கோமாளித்தனமாக நடக்கும் யாழ்ப்பாண ஜேவிபி எம்.பி!

யாழ் மாவட்டத்தில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் சலுகை தொடர்பான கூற்று கோமாளித்தனமானது என, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எந்த சலுகைகளையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் கருத்து தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இந்தக் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள கீதநாத், இந்த கூற்று கோமாளித்தனமான ஒன்றாக இருக்கிறது. குறித்த சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றமை மக்களுக்கு சேவை செய்வதற்கான நோக்கத்துடனேயே.
இந்த சலுகைகளைப் பெறாமல் தவிர்ப்பது எந்த வகையிலும், நாட்டின் பொருளாதாரத்தை அல்லது வருமானத்தை உயர்த்தப் போவதில்லை.

ஆகவே இந்த சலுகைகளையும் கொடுப்பனவுகளையும் பயன்படுத்தி மக்களுக்கு நீங்கள் சேவை செய்யுங்கள். இந்த சலுகைகளை பெற்றுக்கொள்வதும் தவிர்ப்பதும் உங்கள் விருப்பமே என்றாலும், இம்முறை யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட மக்கள் உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் உங்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்துள்ளார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வை வழங்குவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் இதுபோன்ற பேச்சுகளால் மக்களின் வயிறு நிரம்பப் போவதில்லை. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுவதன் நோக்கம் அதன்மூலம் மக்களுக்கு செறிவான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே.

எனவே இவ்வாறான கேலிக்கூத்தான கதைகளைப் பேசுவதை விடுத்து மக்கள் சேவையில், குறிப்பாக இதுவரையிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தேர்தல் காலத்தில் தொலைக்காட்சி விளம்பரமொன்றில் கையடக்க தொலைபேசி ஒலிப்பதிவொன்றை காண்பித்த விவகாரத்திலும் பலராலும் கிண்டலடிக்கப்பட்டதுடன், பொறுப்பற்ற விதமாக நடந்து கொண்டதாகவும் விமர்சிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

Pagetamil

பொது மன்னிப்பில் ரஷ்ய பெண்ணும் விடுதலை

Pagetamil

சுனாமி 20: ‘பேபி 81’ இற்கும் 20 வயது!

Pagetamil

மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது

east tamil

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

Leave a Comment