இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பா.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்ற (17) வவுனியாவில் கூடிய கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை தனக்கு வழங்குமாறு மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்தார். ஒரு வருடமேனும் அந்த பதவியை தனக்கு வழங்குமாறு அவர் கோரினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் அதை ஆதரித்தார்.
எனினும், சீ.வீ.கே.சிவஞானம், பா.சத்தியலிங்கத்தின் பெயரை முன்மொழிந்தார். அதை, துரைராசசிங்கம் வழிமொழிந்தார். இ.சாணக்கியன், த.கலையரசன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அதை ஆதரித்தனர்.
முன்னதாக, எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்க வேண்டுமென இ.சாணக்கியன் யோசனை தெரிவித்தார். அதை கலையசரன், துரைராசசிங்கம் ஆகியோரும் ஆதரித்தனர்.
எனினும், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை பெற மாட்டேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.