சுமந்திரன் தமிழர்களுக்கு தேவை; அவர் வடக்கு முதலமைச்சராக வேண்டும்: சி.சிறிதரன்!

Date:

எம்.ஏ.சுமந்திரனின் சேவை தமிழ் மக்களுக்கு தேவை. அவர் பொறுமையாக இருந்து, வடமாகாணசபை முதல்வராக வேண்டுமென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இன்று (17) வவுனியாவில் நடந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தின் போது, சிறிதரன் இதனை தெரிவித்தார்.

“சுமந்திரன் அவசரப்படக்கூடாது. அவரது சேவை தமிழ் மக்களுக்கும், கட்சிக்கும் தேவை. சம்பந்தன் ஐயா சொன்னதை போல, எல்லாம் மடியில் வந்து தானாக விழும். விரைவில்- அடுத்த ஆறு மாதங்களுக்குள் வடமாகாணசபை தேர்தல் வரும். அதற்கு எமக்கு பொருத்தமான முதலமைச்சரும் தேவை. சுமந்திரன் பொறுமையாக இருந்தால், எல்லாம் தானாக அமையும்“ என்றார்.

சி.சிறிதரன் இதனை தெரிவித்த போது, எம்.ஏ.சுமந்திரன் மௌனமாக அவதானித்துக் கொண்டிருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்