புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முன்னணியில் இருந்து மூன்று எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த மூவர் உட்பட ஐந்து எம்.பி.க்கள் கொண்ட இந்த குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னணி ரவி கருணாநாயக்கவால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1