25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

தமிழ்ப் போராளிகளும் இனச்சுத்திகரிப்புச் செய்ததாக சர்வதேசம் வரை பிரகடனம் செய்தவர் சுமந்திரன்

தமிழ் விடுதலைப் போராளிகள் இனச்சுத்திகரிப்புச் செய்தவர்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துப் பிரகடனம் செய்த சுமந்திரன் வீட்டுச் சின்னம் தொடர்பாக வீட்டுச் சின்னம் தலைவரால் கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்துக்கு ஆதரவு சேர்க்குவகையில், மட்டக்களப்பு கறுவன்கேணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பிரச்சாரக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் கோ.கருணாகரம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு எவர்களது முயற்சியால் எப்படி உருவானதென்பது வட கிழக்கு தமிழ் மக்கள் அனைவருமே அறிந்த உண்மை. இன்று தமிழ்த் தேசியப் பம்மாத்துக் கூச்சலிடும் சுமந்திரன் அப்போது கூட்டமைப்புக்குள் இருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்குள் தடம் பதிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருட்சமாக வளர்ந்த காலத்தில் இடையில் எவரது தேவைக்காவோ, எவராலோ, தமிழ்த் தேசியத்துக்குள் இருந்த சிரேஸ்ட உறுப்பினர்களை வைப்பாஸ் பண்ணி சம்பந்தரால் உள்நுழைக்கப்பட்டவரே சுமந்திரன். அவருக்கு தந்தை செல்வாவின் தமிழ்த் தேசிய லட்சியமும் புரியாது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றின் தோற்றமும், அதன் வலிகளும் போராட்டக்குழுக்கிடையிலான முரண்பாடுகளும் போராட்டம் எவ்வாறு திசைமாறி மௌனிக்கப்பட்டது என்பதையும் புரியாதவரே சுமந்திரன்.

அவர் புரிந்ததெல்லாம் போராளிகள் இனச் சுத்திகரிப்பாளர்கள், சிங்கள இராணுவம் போர்க்குற்றம் செய்ததென்று குற்றம் சுமத்துவதாயின் அக்குற்றம் தமிழ்ப் போராளிகளுக்கும் பொருந்தும், தமிழ் விடுதலைப் போராளிகள் இனச்சுத்திகரிப்புச் செய்தவர்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் உரத்துப் பிரகடனம் செய்த சுமந்திரன் வீட்டுச் சின்னம் தொடர்பாக வீட்டுச் சின்னம் தலைவரால் கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்.

இதிலிருந்தே வீட்டுச் சின்னம் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்சின்னமாக உருவாகிய வரலாறு தெரியாதா அல்லது தெரியாதவராக நடிக்கின்றாரா என்பதும் புரியும்.

சுமந்திரன் எவ்வாறு தமிழ்த் தேசியத்துக்குள் உள்வாங்கப்பட்டாரோ அவ்வாறே வீட்டுச் சின்னமும் தமிழ்த் தேசியத்தின் சின்னமாகியதுதான் வரலாறு. தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய விடுதலைப் பேராட்ட அமைப்பினர், வெகுசன ஊடகத்துறை சார்ந்தோர், சிவில் அமைப்பினர் ஆகியோரின் அர்ப்பணிப்பில் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்ப கால சின்னம் தந்தை செல்வா உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியன் சின்னமாகவே இருந்தது. உதய சூரியன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகிய காலத்தில் சுமந்திரன் அரசியலுக்குள் தடம் பதிக்கவே இல்லை.

இக்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உள்ளகப் பிரச்சினையால் உதய சூரியன் சின்னத்தினை பொதுச் சின்னமாக பாவிப்பதில் ஏற்பட்ட சட்டச்சிக்கல் காரணமாகவே உதய சூரியனுக்குப் பதிலாக வீடு பொதுச் சின்னமாக மாறிய போதும் சுமந்திரன் தமிழ்த் தேசிய அரசியல் பொதுவெளியில் கால் பதிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்காலத்தில் ஐக்கியமாக வட கிழக்கு தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒருவர் மீது ஒருவர் வசைபாடாது, ஒருவர் மீது ஒருவர் குறை காணாத, ஒரு நிறைவான அமைப்பாகவே கூட்டமைப்பு மிளிர்ந்தது. இந்தச் சின்னத்தில் போட்டியிட்ட அனைவரது ஒட்டுமொத்த வாக்குகளின் விளைவாக சம்பந்தன் அவர்களது தனிப்பட்ட விருப்பின் பேரில் தமிழ்த் தேசியவாதியாக தமிழ்த் தேசிய அரசியல் தளத்துக்குள் கால் பதித்தவர் சுமந்திரன்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். என்று சுமந்திரன் வீட்டுக்குள் நுழைந்தாரோ அன்றிலிருந்து புகையத் தொடங்கிய பிரச்சினை இன்று வீடே பற்றியெரியும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதன் பின்னர் நடந்தவைகள் அனைத்தையும் தொடர்ந்து கூறி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

நடந்தவை யாவற்றையும் எமது தமிழ்த் தாயக மக்கள் நன்கறிவர். நன்கறிந்த நம் தமிழ் மக்கள் தேர்தல் தினத்தன்று தம்முடைய வாக்குகள் மூலம் நல்லபாடம் புகட்டுவர் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சம்மாந்துறை நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

east tamil

UPDATE – களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

களுவாஞ்சிகுடியில் சடலம் மீட்பு

east tamil

முறக்கொட்டாஞ்சேனை விபத்து – ஒருவர் பலி

east tamil

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment