பலாப்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறும் போது தரையில் விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 14 வயதுடைய பாடசாலை மாணவன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (07) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவன் மரத்தில் இருந்து விழுந்து 52 நாட்களுக்குப் பிறகு இந்த இறந்தார் என்றும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.
பொல்பித்திகம பிரிவு கல்வி வலயத்திற்குட்பட்ட மொரகொல்லாகம கடவல வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நிசல் நிம்சர பத்திரத்ன என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவனின் தாயார் வீட்டுப் பணியாளராக வெளிநாடு சென்றுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1