நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் சிலர் தவறான தீர்மானத்தை அறிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுக்கே வாக்களிப்பது அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், அண்மையில் திடீரென சிலர் பொருளாதார காரணங்களின் நிமித்தம் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாக கூறி வரும் நிலையில், வடமாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் என்ற பெயரில் செயற்படும் சிலர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன்,
இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்களாக, முஸ்லிங்களாக பிரிந்து நிற்கின்றோம்.
இனவாதத்தை கையில் எடுக்காத ஒரு கட்சி தான் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி சரியான முறையில் அணுகி வருகிறார்கள் என தெரிவித்தார்.