27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

வவுனியா சிறையில் இலஞ்சம் பெற்ற உத்தியோகத்தர் கைது!

மன்னார் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்கு உணவு மற்றும் பான போத்தல்களை வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கடந்த 6ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, ​​சந்தேகநபருக்கு உணவு மற்றும் பான போத்தலை வழங்குவதற்காக சந்தேக நபரின் உறவினர் ஒருவரிடம் ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து லஞ்சம் கொடுத்த உறவினர் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

சந்தேகநபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு!

east tamil

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment