முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காகவும் அவர்களின் பராமரிப்புக்காகவும் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (06) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒரு வருடமாக மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வைத்தியசாலைக்கு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பராமரிப்புக்கான செலவு கூட செலவிடப்படவில்லை என அங்கு தெரிவித்தார்.
இந்த செலவு மிகவும் அதிகம் எனவும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விகிதாசார முறையில் பாதுகாப்பு வழங்க குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
விசேட பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு விசேட பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.