Pagetamil
இலங்கை

புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது!

நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30) இரவு 10 மணியுடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் சஞ்சய ஜயசுந்தர தெரிவித்தார்.

நேற்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஏனைய நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!