யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மோதலில் ஈடுபட்ட வி.மணிவண்ணன் தரப்பு, மற்றும் ஊரிலுள்ள இளைஞர் குழுவை சேர்ந்த 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம் இந்த மோதல் சம்பவம் நடந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மணிவண்ணன் தரப்பினரால் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட யுவதிகளுடன், உள்ளூர் இளைஞர்கள் சிலர் சேட்டை விட முயன்றனர். இதை தொடர்ந்து இரு தரப்புக்குமிடையில் மோதல் நடந்தது.
உள்ளூர் இளைஞர்கள் கூட்டமாக வந்து, மணிவண்ணன் தரப்பினரை நையப்புடைத்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட மணிவண்ணன் தரப்பை சேர்ந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மணிவண்ணன் தரப்பை சேர்ந்த 4 பேரையும், பெண்களுடன் சேட்டைவிட்டு மோதலுக்கு காரணமான உள்ளூர் இளைஞர்கள் 4 பேரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 8 பேருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இதேவேளை, இந்த மோதல் சம்பவம் பதிவாகிய சந்தர்ப்பத்தில், பிரச்சாரத்திற்காக சம்பளத்துக்காக ஈடுபடுத்தப்பட்ட பெண்ணொருவருக்கு 17 வயது என்ற விபரமும் வெளியாகியுள்ளது. உரும்பிராய் பகுதியை சேர்ந்த இந்த சிறுமியும் மணிவண்ணன் தரப்பினரால் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.