தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சாதி வெறியர் என தெரிவித்துள்ளார், தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் மத்தியகுழு உறுப்பினரும், தற்போது அந்த கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருமான சவரிமுத்து ஸ்ராலின்.
இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மதுபான விற்பனை நிலையத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த குடும்பமொன்று, அண்மையில் மற்றொரு மதுபான விற்பனை நிலையத்தை பெற்றுள்ளனர். க.வி.விக்னேஸ்வரன் வழியாகவே அந்த மதுச்சாலை உரிமம் பெறப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளியான பிரேமானந்தாவின் சீடர்கள் என்ற அடிப்படையில் அந்த குடும்பத்துடன் விக்னேஸ்வரன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.