மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறு உலகு முடிவில் வீசப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த இளைஞன் கொலை செய்யப்பட்டு, பள்ளத்தாக்கில் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
ஹாலிஎல ரொசர்ட் தோட்டத்தை சேர்ந்த 23 வயதான சுஜீவன் என்பவரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலத்தை மீட்பதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மீண்டும் மீட்பு பணிகள் நடைபெறும்.