இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், பதில் செயலாளர், நிர்வாக செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாண நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில் மாவை சேனாதிராஜா, ப.சத்தியலிங்கம், சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18க்கு திகதியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1