போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான பஜீரோ வாகனம் பழுதடைந்த நிலையில் நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நுவரெலியா, ஹாடின்ஹில் வீதியில் அமைந்துள்ள நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான காணியில் இந்த ஜீப் பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரி ஒருவருக்கு இந்த ஜீப்பும் மற்றுமொரு ஜீப்பும் அமைச்சரினால் வழங்கப்பட்டதாகவும், மற்றைய ஜீப்பை கண்டுபிடிக்க பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தார்.
நுவரெலியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு ஜீப் வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
பல அரச வாகனங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதால், அந்த வாகனங்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.