இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா (அந்த பதவியிலிருந்து விலகுவதாக அவர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்) அழைக்கப்பட்ட போதும், அவர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் வேட்பாளர் தெரிவில் திருப்தியின்மையினால் அவர் கூட்டத்தை புறக்கணித்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.