முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற அரசியல் கட்சி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.
அது தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று (10) தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
“ஐக்கிய ஜனநாயகக் குரல்” என்று அழைக்கப்படும் அரசியல் கட்சியின் சின்னம் ஒலிவாங்கி.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த கட்சி கட்சி போட்டியிடவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானும் அக்கட்சியில் இணைந்துகொண்டார்.
அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் கட்சியின் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி புலம்பெயர் தமிழரான அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தினால் வாங்கப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.