ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பு மனு இன்று (9) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைரெத்தினம். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் நகுலேஸ், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த வசந்தராசா, ஓய்வுபெற்ற அதிபர்
தேவராஜன், ஜீ. மனோராதா, வினாயகமூர்த்தி குருக்கள் ஆகியோர் சங்கு சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.