ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் கூட்டடி சார்பில் வேட்பாளர்களாக தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.