27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி மதுச்சாலை உரிமத்துக்கு உதவிய கட்சி திலீபனை அஞ்சலித்து விட்டு வேட்புமனு தாக்கல்!

பார் நடராசா என அறியப்பட்ட பிரபல மதுச்சாலை உரிமையாளரின் மகளுக்கு கிளிநொச்சியில் மற்றொரு மதுச்சாலை பெற உதவிய அல்லது மதுபான உரிமத்தை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வேட்புமனு நேற்று புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் (சட்டத்தரணி), தவச்செல்வம் சிற்பரன் (கட்டட கலைஞர், தமிழ் மக்கள் கூட்டணி சிரேஷ்ட உறுப்பினர்), மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் (தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்ட கிளையின் முன்னாள் உப தலைவர் மற்றும் மகளிர் அணி உறுப்பினர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), வரதராஜா பார்த்திபன் (யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மற்றும் யாழ் எயிட் தொண்டு நிறுவன சிரேஷ்ட தலைவர்), நாவலன் கோகிலவாணி (முன்னாள் போராளி, நிர்வாக இயக்குநர், தொழில்முனைஞர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்), அருள்பரன் உமாகரன் (சட்டத்தரணி, கவிஞர் மற்றும் முன்னாள் தமிழரசு கட்சி உறுப்பினர்), பிரான்சிஸ் குலேந்திரன் செல்ரன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், யாழ் பல்கலைக்கழக பட்டதாரி), முருகானந்தன் யசிந்தன் (ஆசிரியர், கோண்டாவில் இந்துக்கல்லூரி), கதிரேசன் சஜீதரன் (பிராந்திய இயக்குனர், ஆர்பிகோ நிறுவனம்), ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பதிவுசெய்யப்பட்ட மான் சின்னத்தில் இவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி முன் வேட்பாளர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அரசியலில் இளையோருக்கு இடமளிக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆனால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் மூன்று வாரங்களுக்கு முன்னர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Pagetamil

ஐ.ம.ச தேசியப்பட்டியலுக்கு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு!

Pagetamil

ஆசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்!

Pagetamil

குடிநீர் வசதி இல்லாமல் பத்தனை கிரக்கிலி தோட்ட பிரதேச மக்கள்

east pagetamil

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

Leave a Comment