Pagetamil
இலங்கை

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றம்!

புதிய இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்த போதிலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை வளர்ப்பதை இலக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின்படி,  51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கிறது.

இதற்கிடையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கான தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் அதேவேளை, தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில்  வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை நிறுவிய தீர்மானம் 51/1 மற்றும் முந்தைய தீர்மானம் 46/1 ஆகியவற்றை நாடு எதிர்க்கிறது என்று ஜெனீவாவில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

 

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!