26 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

பொதுவேட்பாளருக்கு வாக்களித்தால் டிரைக்டாக தீர்வு தான்: அடித்து விட்ட ரெலோ உறுப்பினர்!

போரின் பின்பாக நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது ஏமாற்றிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்துவரும் ஆதரவைப் பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேசம் பொதுவேட்பாளரின் நியாயப்பட்டை அங்கீகரிக்கின்றது. இந்நிலைமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ் வெற்றியை எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் வாயிலாக எமது மக்கள் வரலாற்று வெற்றியாக்குவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முனனாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் அடித்து விட்டுள்ளார்.

யாழ். முத்திரைச்சந்தியில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய பொதுவேட்பாளரின் இறுதிப் பொதுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் தம்மால் ஒரு அளவுக்கு மேல் தலையிட முடியாது, இருக்கும் சூழலுக்குள் அனுசரித்து தீர்வொன்றை பெறுவதே புத்திசாலித்தனம் என இந்தியா, அமெரிக்கா பிரதிநிதிகள் தமிழ் தரப்பை அழைத்து தெளிவாக குறிப்பிட்டு விட்ட பின்னரும், சர்வதேசத்தை சுட்டிக்காட்டி புளுகித்தள்ளியுள்ளார் தியாகராஜா நிரோஸ்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தம் மீது இலங்கையில் காலத்திற்குக் காலம் கட்டவீழ்த்து விடப்பட்ட திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகள் மற்றும் இனப்படுகொலைக்கு நீதியோ தீர்வோ வழங்கப்படாது நாம் ஏமாற்றப்பட்டு வந்த விரக்தி நிலையில் தமிழ்த் தேசிய பொது வேட்பளரை நிறுத்தினோம். இப் பொதுவேட்பாளர் எண்ணம் தனியே அரசியல் கட்சி சார்ந்த அணுகுமுறையல்ல. மாறாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், நீதிக்கான சர்வதேச அணுகுமுறைகளை கையாளத்தக்க சர்வதேச வழிநடத்தலை கொண்டது. தமிழ் மக்கள் தாயகம் தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அவ்வாறான பிரிக்கமுடியா உரிமைகளை ஒருபடி மேலே சென்று அணுகுவதற்கு எமது மக்களின் ஜனநாயக ஆணை இன்றைய சூழ்நிலையிலும் அவசியமாகவுள்ளது.

தே;hதல் முடிவுகளை அடிப்படையாக வெளிப்படுத்தி நாம் சொந்த நாட்டிற்குள் எந்தளவு தூரம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை வெளிப்படுத்தி நியாயத்தினைப் பெற்றுக் கொள்வற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசியல் – புத்திஜீவிகள் கட்டமைப்பினை தமிழ்த் தேசம் உருவாக்கிவிட்டது. இவற்றுக்கு மேலாக சர்வதேச நீதியை அணுகத்தக்க நிபுணத்துவமுள்ள பல கட்டமைப்புக்கள் பொதுக்கட்டமைப்பினுள் உள்ளன.
ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகளுக்கு சர்வதேச ஆதரவும் தாரளமாக இருக்கின்றது. மக்கள் அச்சமின்றி நம்பிக்கையுடன் வாக்களித்து தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை உலகம் ஏற்றுக்கொண்ட அறிவார்த்தமான வழிமுறைக்கு மேலும் ஒருபடி முன்நகர்த்துவதற்கு ஆணையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment