யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் சாப்பாட்டினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம். அந்தவகையில் இவருக்கு வழமையாக சாப்பாட்டினை கொடுக்க பெண் நேற்றையதினம் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை.
இந்நிலையில் அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டார். நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்து சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.