சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதி ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (04) மாலை படுகொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் கட்டுநாயக்கா, பிரேஸ்லைன் வீதி, அமண்டொலுவ, மெரினா மாவத்தை இலக்கம் 05 இல் அமைந்துள்ள தங்கும் விடுதியொன்றின் படுக்கையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பலதுருவெல்ல, சேரன்கடவைச் சேர்ந்த எம். ஷிரோமி புஷ்பலதா (வயது 43) என்பவரே கொல்லப்பட்டார். அவர் ஒரு குழந்தைக்குத் தாய் என்பது காவல்துறையி விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், அந்த தங்கும் விடுதியில் தனது கணவன் என குறிப்பிட்ட ஆண் ஒருவருடன் 9 வருடங்களாக வசித்து வந்ததுடன், கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது குழந்தை உறவினர் ஒருவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தத.
பெண்ணின் கொலைக்கு பிறகு அந்த நபர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.