ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாசா பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதுடன் பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
இதன் தொடராக வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கும் இன்று காலை சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன் போது அக் கட்சியின் வடக்கு மாகாண இணைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குளிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1