26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
கிழக்கு

யானையின் தாக்குதலில் ஏக காலத்தில் கொல்லப்பட்ட இருவர்

வயல் வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் கடந்த புதக்கிழமை (28) காலை 8.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் பாதை ஊடாக பயணித்த நிலையில் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் நிந்தவூர் – 02 இரண்டாம் குறுக்குத் தெரு பிரிவை சேர்ந்த திருமணமாகாத 62 வயது மதிக்கத்தக்க மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்ற நபரே உயிரிழந்தவராவார்.

மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை செவ்வாய்க்கிழமை(20) மாலை மணல் அகழ்வு வேலைக்கு சென்ற நிலையில் யானையினால் தாக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விரைவில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளம்

east tamil

அக்கரைப்பற்று புகைப்படக் கலை விழா- 2025

east tamil

கல்முனை-கொழும்பு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

east tamil

கந்தளாய் கொள்ளைச் சம்பவம்: சம்பூர் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது

east tamil

கல்லோயா ஆறு உடைபெடுக்கும் ஆபத்து

east tamil

Leave a Comment