26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
உலகம்

இங்கிலாந்தில் 15 வயதிலேயே உடலுறவு கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சிறுவர்களின் கதி பரிதாபம்!

இங்கிலாந்தில் உள்ள 15 வயது சிறுமிகள் அதே வயதுடைய பிற நாட்டினரை விட அதிகமாக உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையொன்று இதனை தெரிவித்துள்ளது.

அவர்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது, இது திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

WHO அவர்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தாதது குறித்து கவலைகளை எழுப்பியது. இது சிறந்த பாலியல் கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று கூறுகிறது. கருத்தடைக்கான அணுகலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று மேலும் கூறியது.

பள்ளி வயது குழந்தைகளின் ஆரோக்கிய நடத்தை ஆய்வின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சியாளர்கள் 2014 மற்றும் 2022 க்கு இடையில் 42 நாடுகளிளை சேர்ந்த 15 வயதுடைய 242,000 பேரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தினர்.

மிகச் சமீபத்திய ஆண்டில் 15 வயதுடைய பெண்கள் அனைத்து நாடுகளிலும் சராசரியாக 15 சதவீதமானவர்கள் உடலுறவு கொண்டுள்ளனர். எனினும், ​​இங்கிலாந்தில் 15 வயதுடைய பெண்களில் 21 சதவீதம் பேர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஆணுறை உபயோகத்தில், மற்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களைக் காட்டிலும் இங்கிலாந்தில் ஆணுறை பயன்படுத்தியவர்களின் சதவீதம் குறைவாக இருந்தது. தாங்கள் உடலுறவு கொண்டதாக கூறும் சிறுமிகளில், இங்கிலாந்தில் 48 சதவீதம் பேர் தாங்கள் கடைசியாக ஆணுறை பயன்படுத்தியதாக கூறியுள்ளனர். உலக சராசரி 57 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், பிற கருத்தடை முறைகள் இந்த காலகட்டத்தில் வளர்ச்சியைக் கண்டன. ஆணுறை பயன்பாடு குறைந்த நேரத்தில் அவர்களில் அதிகமானோர் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தினர்.

அவர்களில் 41 சதவீதம் பேர் கருத்தடை மாத்திரையை உட்கொண்டிருப்பதாகவும், 32 சதவீதம் பேர் எந்த முறைகளையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர். உலகளாவிய ரீதியில் இந்த சதவதங்கள் முறையே 26 மற்றும் 30 ஆகும்.

இதேநேரம், இங்கிலாந்தில் உள்ள சிறுவர்களில், 15 வயதில் உடலுறவு கொள்ளும் சராசரி எண்ணிக்கை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது.

நாட்டில் உள்ள 15 வயது சிறுவர்களில் 18 சதவீதம் பேர் உடலுறவு கொண்டுள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018 இல் 22 சதவீதத்திலிருந்து குறைந்துள்ளது. மற்ற நாடுகளில், சராசரியாக 15 வயது சிறுவர்களில் 20 சதவீதம் பேர் உடலுறவு கொள்வதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது ஆணுறைகளின் பயன்பாடு குறைந்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அவர்களில் 61 சதவீதம் பேர் மட்டுமே ஆணுறை பயன்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் 2018 இல் எண்ணிக்கை 69 சதவீதமாக இருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் குற்றச்சாட்டில் இங்கிலாந்து அமைச்சர்

east tamil

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

Leave a Comment