சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்று நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 25 நாட்கள் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 55 வயதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
சந்தேக நபரை அத்துகிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் அத்துரிகிரிய கல்பொத்தவ வீதி பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.