26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

அவுஸ்திரேலியாவில் தீமூட்டி உயிர்மாய்த்த இலங்கை அகதி இளைஞன்!

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. தனது பெற்றோர் சகோதரர்களுடன் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

புத்தளம் பகுதியை சேர்ந்த மனோ யோகலிங்கம் என்ற இளைஞன் விசா பிரச்சினை காரணமாக மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய்கிழமை அவர் தனக்கு தானே தீவைத்து கொண்டதாகவும், பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் நேற்று (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலிய மத்திய அரசின் “அகதிகள் தொடர்பாக அறிமுகப்படுத்திய கொள்கைக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

Leave a Comment