27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
இலங்கை

யாழில் சிக்கிய சட்டவிரோத இரசாயன களை நாசினிகள்

யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனம், களை நாசினிகள், பூச்சி நாசினிகள் விற்பனை அதிகாித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாய இராசயன கட்டுப்பாட்டு பிாிவினா் அதிரடி சோதனை நடத்தியுள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு ஆபத்தான இரசாயனங்கள் அடங்கிய களை நாசினிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆவரங்கால் பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டு அங்கிருந்து சுமாா் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத களை நாசினிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வா்த்தக நிலையத்திற்கு சொந்தமான களஞ்சிய சாலையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வா்த்தக நிலைய உாிமையாளா் மீது விவசாய திணைக்களத்தினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றிலும் திடீா் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கும் சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டு வா்த்தக நிலைய உாிமையாளருக்கு எதிராக சாவகச்சோி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,

குறித்த வா்த்தக நிலைய உாிமையாளருக்கு இன்றைய தினம் ஒன்றரை லட்சம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து களை நாசினிகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு யாழில் விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் மண் வளமும் உடனடியாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் இவ்வாறான சட்டவிரோத களை நாசினிகள் தொடா்பாக அவதானமாக இருக்கவேண்டும் எனவும்,

சட்டவிரோதமான களை நாசினி வியாபாரம் தொடா்பாக தகவல் அறிந்தால் விவசாய திணைக்களத்திற்கு தகவல் வழங்கவேண்டும் எனவும் மாவட்ட விவசாய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளா் அஞ்சனா ஸ்ரீரங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மேலும் சட்டவிரோத களை நாசினி வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடரும் எனவும், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவா் கூறியுள்ளாா்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்க்களப்பில் சோகம்

east pagetamil

இணைப்பேராசிரியர் ரிச்சர்ட் பிரியோ நூலக நிறுவனத்துக்கு வருகை

east pagetamil

‘பைத்தியக்காரன் அர்ச்சுனாவை வெளியேற்றுங்கள்’: யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

Pagetamil

யாழ் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Pagetamil

Leave a Comment