போலி ஆவணமொன்றை சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட வழக்கு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை கையளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், பிரதிவாதி டயனா கமகேவின் கைரேகைகளை எடுத்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர், தலா ரூ.25,000 ரொக்கம் மற்றும் ரூ.10 இலட்சம் ஆகிய இரு சரீரப் பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1