28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil
குற்றம்

சுவிஸ்காரரை பலியெடுத்த மது விருந்து!

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சுவிஸ் நாட்டில் இருந்து விடுமுறையில் வந்த ஒருவர் தங்கியிருந்துள்ளார்.

அங்கு அவரும், அவரது உறவினரும் இரவு மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இவ் இடத்திலேயே மரணமடைந்துள்ளார். செல்லத்துரை விமலநாதன் (66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயக்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் 60 வயது குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

Leave a Comment