27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
விளையாட்டு

PAK vs BAN முதல் டெஸ்ட் | 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் வெற்றி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பங்களாதேஷ்.

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ரொஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. சைம் அயூப் 56, ரிஸ்வான் 171, சவுத் ஷகீல் 141 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதையடுத்து ஆடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்தார். மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 56 மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் 77 ரன்கள் எடுத்தனர். அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 341 பந்துகளில், ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிபங்களாதேஷ்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 மற்றும் ஷகிப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது பங்களாதேஷ். 6.3 ஓவர்களில் அதனை எட்டி பங்களாதேஷ் வரலாறு படைத்தது. ஆட்ட நாயகன் விருதை முஷ்பிகுர் ரஹீம் பெற்றார்.

முதல் வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பங்களாதேஷ். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் பங்களாதேஷ் விளையாடி உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக 12 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியை சமனும் செய்திருந்தது பங்களாதேஷ். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி 10 விக்கெட்டுகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதேபோல சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகளில் ஆட்டத்தை பாகிஸ்தான் இழப்பதும் இதுவே முதல் முறை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment