வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய ரௌடிகளை கைது செய்ய நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று (21) இரவு 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரே கத்தியால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாக அந்த எரிபொருள் நிரப்பு நிலையம் அமைந்துள்ளது.
துன்னாலையை சேர்ந்த இரண்டு ரௌடிகள் நேற்று இரவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, ஊழியரை திடீரென கத்தியால் வெட்ட ஆரம்பித்தனர்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
தாக்கதலில் ஈடுபட்ட துன்னாலை ரௌடிகள் இருவரையும் அயைாளம் கண்டுள்ளதாக தெரிவித்த நெல்லியடி பொலிசார், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே ரௌடிகள் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன், ரௌடிகளை அடக்குவதில் நெல்லியடி பொலிசாரின் நடவடிக்கையின் தீவிரத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.