26.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

தனமல்வில மாணவி விவகாரம்: சட்ட மருத்துவர் கைது!

மாணவர்கள் குழுவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாட்டையடுத்து, தனமல்வில பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போது, ​​அவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியை பிணையில் விடுவிக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர், சட்ட மருத்துவ அதிகாரியை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

ஓகஸ்ட் 10 ஆம் திகதி தனமல்வில தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனமல்வில பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமியை அச்சுறுத்தியதுடன் சிறுமிக்கும் சிறுமியின் தாயாருக்கும் கடும் அழுத்தத்தை பிரயோகித்து வைத்தியரின் விருப்பத்திற்கேற்ப சிறுமியின் பதிலை கூட மாற்றியதாக சிறுமியின் தாய் ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடு செய்துள்ளார். .

அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹம்பாந்தோட்டை நீதவான், வைத்தியரை 300,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். விசாரணையின் உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், மேலும் வழக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

east tamil

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

Leave a Comment