யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் 17 வயதான மாணவியொருவர், 3 பேரால் ஆபாசப்பட காட்சிகளை ஒத்த விதத்தில் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அவர் 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்தது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இரண்டு திருமணங்கள் செய்துள்ளார். இரண்டு கணவர்களும் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து சிறுமியின் தாயார் கசிப்பு வியாபாரம் செய்து வந்துள்ளார்.
சிறுமியின் தாயின் சகோதரி அயல் வீட்டில் வசித்து வந்தார். அவர் சிறிது காலத்தின் முன்னர் கணவரை பிரிந்து சென்று விட்டார். கணவர் அதே வீட்டில் தொடர்ந்து வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதையடுத்து, மனைவியின் சகோதரி வீட்டுக்கு- அயல் வீடு- சாப்பிடுவதற்காக அவர் வருவது வழக்கம்.
இந்த சமயத்தில் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் சிறுமிக்கு 16 வயது. சிறுமியிடம் காதல் விண்ணப்பம் செய்த சித்தப்பாவுக்கு 34 வயது.
சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்வதாகவும் சித்தப்பா கூறிய போது, சிறுமி மறுத்ததாகவும், தனது வாயை பொத்தி, வலுக்கட்டாயமாக வீட்டு அறைக்குள் இழுத்து சென்று வல்லுறவுக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில் சிறுமியின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த விவகாரங்களை சித்தப்பா தனது நண்பர்களான 21, 22 வயதான இரண்டு இளைஞர்களிடம் கூறியுள்ளார்.
தாயார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி கசிப்பு வியாபாரத்தை நடத்திய போது, அவரிடம் கசிப்பு குடிக்க சென்ற 21, 22 வயதான இரண்டு நண்பர்களும் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
2023 நவம்பர் மாதத்தில் சித்தப்பாவினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சிறுமி, இந்த மாதம் 12ஆம் திகதி வரை அவர்களால் பல முறை வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் சிறுமியை தனித்தனியாக வல்லுறவுக்குள்ளாக்கி வந்த நிலையில், அண்மையில் மூவரும் ஒன்றாக ஆபாசப்படம் பார்த்துள்ளனர். அந்த படக்காட்சியை போல, மூவரும் சிறுமியை இயற்கைக்கு முரணான விதத்தில் வன்புணர விரும்பியுள்ளனர்.
அண்மையில் சிறுமியை மிரட்டி, அவரது வீட்டு அறைக்குள்ளேயே ஆபாசப்பட காட்சியை போல, மூவரும் சிறுமியை இயற்கைக்கு முரணான விதத்தில்- சம நேரத்தில் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளனர்.
இந்த சம்பவங்களை யாரிடமாவது கூறினால், வாளால் வெட்டிக் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியதால் யாரிடமும் சொல்லாமல் விட்டதாக சிறுமி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்துக்கு அமைய துரிதமாக விசாரணையை ஆரம்பித்த நெல்லியடி பொலிசார், 3 காமுகர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
அவர்கள் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் முன் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.