மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி, செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதன் போது கருப்பு துணியால் தனது வாயை கட்டி, கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மன்னார் அரசாங்க அதிபர், வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பேச்சு நடத்தினார்கள். சிந்துஜாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நிறைவடைந்து, அவர்கள் பணி இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.