ஜனக ரத்நாயக்கவை தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு 3 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட சிலரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (14) பிற்பகல் கைது செய்துள்ளது.
அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப்பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கடை பிரதேசத்தில் உள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர், இலஞ்ச பணத்தை செலுத்த ரத்நாயக்க அங்கு சென்றிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் அக்கட்சியின் முன்னாள் செயலாளரும் அக்கட்சியில் இருந்து 2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும் அடங்குகின்றனர்.