ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1