தைவானில் விவகாரமான விவாகரத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கணவன் உடலுறவு கொள்ள விரும்பும் ஒவ்வொரு முறையும் அவரிடம் மனைவி பணம் கேட்டதாக, விவாகரத்து வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாகரத்து மனுவை கணவர் தாக்கல் செய்தபோது மனைவி எதிர்த்தார். அவரது மனைவி அவருடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கியதாக தைவான் தொலைக்காட்சியான SETN தெரிவித்துள்ளது.
2014 இல், இந்த ஜோடி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளைப் பெற்றது. 2017 ஆம் ஆண்டு தனது மனைவி மாதத்திற்கு ஒரு முறை உடலுறவு கொள்வதாக கூறியதாகவும், பின்னர் 2019 ஆம் ஆண்டு எந்த காரணமும் கூறாமல் உடலுறவை முற்றிலுமாக நிராகரிக்க ஆரம்பித்ததாகவும் அந்த நபர் கூறினார்.
கணவர் “அதிக பருமன்” மற்றும் “திறமையற்றவர்” என்று மனைவி தங்கள் உறவினர்களிடம் தெரிவித்ததாக அந்த நபர் கூறினார்.
2021 ஆம் ஆண்டில், கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் மனைவி அவர்களின் உறவை நீடிக்க விரும்புவதாக உறுதியளித்தார். எனவே அந்த நபர் வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்தார். மேலும் அவர்களின் சொத்தை அவரது பெயரில் பதிவு செய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் எடுத்தார்.
இருப்பினும், தனது மனைவி தன்னை உணர்ச்சி ரீதியாகத் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்வதாகவும், அவருடன் உடலுறவு கொள்ள விரும்பும் ஒவ்வொரு முறையும் தைவான் டொலர் 500 (இலங்கை ரூபா 4612.98) கட்டணமாகக் கேட்டதாகவும் கணவர் புகார் கூறினார்.
கணவர் மீண்டும் இந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசவில்லை என்றும், தங்களுக்குத் தேவையான போது மட்டுமே ஒரு செய்தியிடல் செயலி மூலம் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
தம்பதியினர் திருமண ஆலோசனையையும் முயற்சித்தனர் .ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர்களது உறவை “இறுகியதாகவும், சரிசெய்வது கடினமாகவும்” காணப்பட்டதால், நீதிமன்றம் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கியது.
ஆனால், மனைவி விவாகரத்து செய்ய விரும்பாததால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அது நிராகரிக்கப்பட்டது.
தைவானில் கணவர்களிடம் இருந்து செக்ஸ் கட்டணம் கோரும் வழக்கு பதிவாகுவது இது முதல் சம்பவம் அல்ல.
2014 இல் தைவானில் இதேபோன்ற ஒரு வழக்கு வெளிப்பட்டது, அதில் ஒரு மனைவி தனது கணவனிடம் உடலுறவுக்காக 2000 தைவான் டொலர் (இலங்கை ரூபா 18451.90) வசூலித்ததுடன், அரட்டைகள் மற்றும் உணவுக்கு கட்டணம் வசூலித்தார்.
டிரக் டிரைவராக இருந்த தனது கணவர் குடும்பத்திற்கு எந்தவித நிதி உதவியும் செய்யாததால் அவரிடம் கட்டணம் வசூலித்ததாப மனைவி கூறினார்.
தம்பதியரின் குழந்தைகளும் தங்கள் தாயைப் பின்பற்றி, அவர் அவர்களிடம் பேச விரும்பினால், தந்தையிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தனர்.
தம்பதியினரின் வழக்கு காவல் நிலையத்திற்கு வந்த பிறகு, கணவர் தனது குடும்பத்திற்கு ஒவ்வொரு மாதமும் 20,000 தைவான் டொலர் வழங்க முடிவு செய்தார்.
தைவானில், விவாகரத்து விகிதம் கடந்த ஆண்டு 0.218 சதவீதமாக இருந்தது, இது ஆசியாவிலேயே அதிக விகிதங்களில் ஒன்றாகும்.