எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று (07) கைச்சாத்திட்டுள்ளது.
அங்கு சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது, தயாசிறி ஜயசேகரவின் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, லக்ஷ்மன் வசந்த பெரேரா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1