25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

சிறைச்சாலைக்குள்ளும் ரகளை செய்த அர்ச்சுனா… ரணகளத்தில் காசு பார்க்க நினைத்த யூடியூப்பர்களுக்கும் சிக்கல்!

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, ரகளையில் ஈடுபட்டதுடன் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து, வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு மிரட்டல் விடுத்த வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் திங்கட்கிழமை( 05) உத்தரவிட்டுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு, நகர்த்தல் பத்திரம் ஊடாக திங்கட்கிழமை (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல நீடித்து, மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அர்ச்சுனாவுடன் மன்னார் வைத்தியசாலைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த இரண்டு யூடியூப்பர்களின் வாக்குமூலத்தை பெற்று, அவர்களையும் அடுத்த தவணையில் மன்றில் முற்படுத்துமாறு  பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தது தொடர்பாக மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வைத்தியர் மன்னார் பொலிஸாரினால் சனிக்கிழமை (3) கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா, சிறைச்சலை வைத்தியசாலைக்கு சென்று வைத்தியருடன் முரண்பட்டதாகவும், பின்னர் அவர் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் வெளிநோயாளர் விடுதி வைத்தியருடன் முரண்பட்டதாகவும் தெரிய வருகிறது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

Leave a Comment