மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா, தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
நேற்று மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த அர்ச்சுனா பல குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தார். வைத்தியசாலை காவலர்களை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினால், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ள அர்ச்சுனா, பொலிசாரால் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவாரா என்பது விசாரணையின் பின்னரே தெரிய வரும்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
+1