25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

ஹிருணிகா வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு இதுவரையில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அவர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான  நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படாததால், அவரது கட்சிக்காரர் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மன் காசிம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தனக்கு பிணை வழங்கிய நீதவான் உத்தரவு தொடர்பில் பிரதிவாதி ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக மனுதாரர் ஹிஷாம் ஜமால்டீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனுதாரர் சார்பில் சரவணன் நீலகண்டன் சட்ட நிறுவனத்தினால் அறிவுறுத்தப்பட்ட கமிந்து கருணாசேனவுடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன ஆஜரானார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment