பஞ்சாபை சேர்ந்த பாஜக தலைவர் ரவ்னீத்சிங் பிட்டு. லூதியானா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் காங்கிரஸின் அம்ரீந்தர்சிங் ராஜாவிடம் 20,942 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிட்டுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்சிச்சியில் கலந்து கொள்ள காரில் புறப்பட்ட அவர்போக்குவரத்து நெரிசலில் நேற்றுசிக்கிக் கொண்டார். இந்த நிலையில், பிரதமரின் இல்ல நிகழ்ச்சியில் தாமதமாக பங்கேற்க விரும்பாத பிட்டு காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்து அவரதுபாதுகாவலர்களும் ஓடத்தொடங்கியது டெல்லி சாலையில் இதர பயணிகளிடையே பரபரப்பை உண்டாக்கியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒருவர் வாழ்க்கையில் தாமதம் என்பது இருக்கக்கூடாது. எனவே தான், நெரிசலில் காத்திருப்பதற்கு பதிலாக நிகழ்ச்சியில் சரியான நேரத்தில் பங்கேற்பதற்காக சாலையில் இறங்கி ஓடினேன். பல தலைவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர் என்றார்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள்முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்தான் ரவ்னீத் சிங் பிட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi: BJP leader Ravneet Singh Bittu walks to the PM's residence after his car got stranded in traffic pic.twitter.com/a3KZfdFprL
— IANS (@ians_india) June 9, 2024