பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லையென்பதை, மக்கள் மத்தியில் இலங்கை தமிழ் அரசு கட்சி பிரச்சாரம் செய்யும் என, அந்தக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
எம்.ஏ.சுமந்திரன் தரப்பினரால் யாழில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே, அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டுமென்பதையும், சிவில் சமூகக்குழுக்கள் ஏதாவது ஆலோசனை சொல்லலாமே தவிர, அரசியல் முடிவுகள் எடுப்பதற்கான மக்கள் ஆணையை பெறாதவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1