25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான தமிழர்களை கடத்திக் கொன்ற வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள்

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 11 தமிழ் இளைஞர்களை கடத்தியது மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்றை நியமித்துள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் பீ.சசி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உயர் நீதிமன்ற வழக்கு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்படுவதாகவும், எனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு பரிசீலிக்குமாறும் சட்டமா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment