வாதுவ பிரதேசத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் நகையை அறுக்க முற்பட்ட போது, கொள்ளையனுடன் அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார். அதன் போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து சந்தேக நபரை பிடித்து வாதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1