கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமணத்தின் போது நடைபெற்றுள்ள முறைகேடுகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நாளை வழங்கப்படவிருக்கும் நிலையில் அதற்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் மதிப்பீடுகள் இணையத்தில் வெளியிடப்பட்டதுடன் அதில் குறிப்பிடப்பட்ட பெறுபேறுகளும் வேலைவாய்ப்புக்காக உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் பட்டியலில் காணப்படும் பெறுபேற்றுப் புள்ளிகள் ஒன்றுக்கு ஒன்று முறனாக காணப்படுவதனால் அதற்காக நீதி கோரி மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை அவர்கள் முற்றுகையிட்டிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக மாகாண பொதுச் சேவை செயலாளரிடம் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இது தொடர்பாக தான் பரிசீலனை செய்பவதாக அவர் குறிப்பிட்டதுடன் இரத்திரணியல் தவறு காரணமாகவே இது நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக செய்தியாளர்களுக்கு கருத்துவெளியிட்ட பட்டதாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தீர்க்கமான முடிவுகள் அறிவிக்கப்படாவிடின் குறித்த நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவினைப் பெற்று சட்டத்தின் மூலமாக தாம் இதனை அணுகுவதற்கும் தயாராக இருப்பதாக இதன்போது பட்டதாரிகள் கருத்து வெளியிட்ட குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-