யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்.
குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் இருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1